ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் அந்த நாடு முழுவதுமாக தலீபான்கள் வசமானது.இதைத்தொடர்ந்து தலீபான்கள் தற்போது தங்களது இடைக்கால அரசை அறிவித்துள்ளனர்.

முன்னதாக தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும் முதல் நாடாக அவர்களுக்கு சீனா தனது ஆதரவைத் தெரிவித்தது. அதேபோல் தலீபான்களும் சீனா தங்களின் மிக முக்கிய கூட்டாளி என தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் தலீபான்களுடன் சீனாவுக்கு உண்மையான சில பிரச்சினைகள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden)தெரிவித்துள்ளார்.