கொரோனா தடுப்பு தொழில்நுட்ப குழுவில் இருந்து மற்றுமொரு விசேட வைத்தியர் விலகியுள்ளார்.

விசேட வைத்தியர் அசோக குணர்த்தனவே இவ்வாறு பதவி விலகியுள்ளார்.

தொடர்ந்தும் குறித்த குழுவில் அங்கம் வகிப்பதில் பயன் அற்றது என எண்ணி இந்த பதவி விலகல் கடிதத்தை கையளித்ததாக விசேட வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னதாக குறித்த குழுவில் இருந்து பேராசிரியர் நீலிகா மலவிகே மற்றும் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம ஆகியோர் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.