கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஒக்டோபர் முதல் வாரத்தில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க மத்திய குழு உறுப்பினர் நளின்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் ,அத்துடன் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய ஆவணம் எதிர்வரும் 17 ஆம் திகதி கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணியிடம் கையளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.