இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பதவியை ஏற்பதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.

இதன்படி ,எம் பி பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை இன்று காலை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்தார் கப்ரால்.

மேலும் ,இந்த எம் பி பதவிக்கு ஜயந்த கெட்டகொட நியமிக்கப்படவுள்ளார். கெட்டகொடவுக்கு பிரதியமைச்சு பொறுப்பொன்று வழங்கப்படவுள்ளது.