மனித உரிமைகளை பாதுகாக்கும் விவகாரத்தில் இலங்கை இன்னமும் ஆக்கபூர்வமாக நடக்கவில்லை என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லே தெரிவித்துள்ளார்.இதன்படி ,மனித உரிமை பேரவையின் 48வது அமர்வு இன்று ஆரம்பமாக நிலையில், ஆணையாளர் இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ,பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும், அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை துன்புறுத்தக்கூடாது, மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கை குறித்து கவனம் செலுத்த வேண்டும், அவசர கால விதிமுறைகளில் சிவில் நிர்வாகத்திற்குள் இராணுவ பிரவேசம் அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்களை மேற்கோள்காட்டி அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.