கொரோனா ஒழிப்பு தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலகுவதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். மேலும் ,கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்தி கொள்ளும் அளவுக்கு காணப்படாததால் இக்குழுவில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.