கைத்தொலைபேசிகள், டயர்கள் மற்றும் ஆடைகள் உட்பட 623 பொருட்களின் இறக்குமதிக்கு வரையறை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை நாட் டிற்கு இறக்குமதி செய்வதற்கு 100% எல்லை வைப்பு தேவைப்பாட்டை அத்தியாவசியமாக்கி உடனடியாக அமுல்படுத்த இலங்கை மத்திய வங்கி தீர்மானித் துள்ளது.

நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கைத்தொலைபேசிகள், தொலைக்காட்சி பெட்டிகள், கைக்கடிகாரங்கள், குளிர்சாதனப் பெட்டிகள், இறப்பர் டயர்கள், பழங்கள், குளிரூட்டிகள், பானங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உட்பட 623 பொருட்கள் இதில் அடங்கும்.

இந்த நடவடிக்கையானது வங்கி அமைப்பில் பரிமாற்ற வீத நிலைத்தன்மை மற்றும் பரிமாற்ற பணப்புழக்கத்தை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.