குருணாகலை உயன்தன பகுதியில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் ஒரு தொகை சீனி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ,குறித்த களஞ்சியசாலையில் இருந்து 170,000 கிலோ கிராம் சீனித் தொகை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, களஞ்சியசாலைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 29,900 மெட்ரிக் தொன் சீனி, அரசுடமையாக்கப்பட்டதாக அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் என்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல தெரிவித்தார்.

நேற்று (01) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது குறித்த சீனித் தொகை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த சீனித் தொகைகை கட்டுப்பாட்டு விலையில், அரச மற்றும் தனியார் வர்த்தக நிலையங்களின் ஊடாக நுகர்வோர் பெருமக்களுக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.