கொவிட் தொடர்பான ஆபத்தான சுமார் ஒரு மில்லியன் காணொளிகள் நீக்கம்!

கொரோனா வைரஸ் தொடர்பில், தவறான மற்றும் ஆபத்தான தகவல்கள் அடங்கிய சுமார் ஒரு மில்லியன் காணொளிகள் யூ டியுப் (YouTube) சமூக வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக யூ டியுப் நிறுவனம் கூறியுள்ளது.

கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூ டியுப் சமூக வலைத்தளம், அறிக்கை ஒன்றின் மூலம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

சுகாதார அமைப்புகளின் நிபுணர்களின் பரிந்துரைக்கு ஏற்ப, குறித்த காணொளிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு காணொளியையும் நீக்குவது தமது கொள்கையாகும் என யூ டியுப் இன் பிரதான தலைமை அதிகாரி நீல் மோஹன் தெரிவித்துள்ளார்.