இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அம்பியூலன்ஸ் வண்டி சாரதியான பி.ஏ. அமரஜீவ கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

அதன்படி ,இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் அம்பியூலன்ஸ் வண்டி சாரதியாக இந்த மரணம் பதிவாகி உள்ளது.

இவர் 17 வருடங்கள் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அம்பியூலன்ஸ் வண்டி சாரதியாக பணியாற்றினார்.

முன்னாள் அமைச்சர் ஜான் செனவிரத்ன மற்றும் பல அரசியல்வாதிகளின் சாரதியாக பணியாற்றிய இவர், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதியாக 2006 இல் சேர்ந்தார்.

அமரஜீவ சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவரது இரத்தம் அவ்வப்போது மாற்றப்பட்டது என அவரது சகோதரர் ஒருவர் கூறினார்.

மேலும் ,இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (23) உயிரிழந்தார்.