முழு உலகும் சுகாதார அவசரநிலையை எதிர்கொள்வதால் மக்கள்  மேலும் விலை அதிகரிப்புகளை எதிர்பார்க்கவேண்டும் என அமைச்சர் மகிந்த அமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் நெருக்கடிகளிற்கு மத்தியில் அரசாங்கம் மக்களிற்கு சலுகைகளை வழங்க தீர்மானித்துள்ளது ,அரசாங்கத்தின் வருமானம் பெரும் வீழ்ச்சியை கண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கை செலவு அதிகரிப்பு குறித்து  அமைச்சரவை கூட்டத்தில் நீண்ட நேரம் ஆராயப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் முழு உலகையும் பாதித்துள்ளதால் தற்போதைய சூழ்நிலையில் பொருட்களின் விலைகள் குறையும் என மக்கள் எதிர்பார்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அரசாங்கம் பொதுமக்களிற்கு பல நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது சீனி பால்மா போன்றவற்றின் மீதான வரியை குறைத்துள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.