'அமெரிக்காவின் மிக உயரமான மனிதர்' என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இகோர் வோவ்கோவின்ஸ்கி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 38.

இதன்படி ,அமெரிக்காவைச் சேர்ந்த இகோர் வோவ்கோவின்ஸ்கி என்பவர் 7 அடி 8 அங்குல உயரம் (234.5 செமீ) கொண்டவர். இந்த அசாதாரணமான உயரத்திற்காக, தன்னுடைய 27-வது வயதில் 'அமெரிக்காவின் மிக உயரமான மனிதர்' என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். இகோர் வோவ்கோவின்ஸ்கி, சில ஆண்டுகளாக இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் ,இந்த நிலையில் இகோர் கடந்த 20-ம் திகதி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அதே நாளில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக அவரது தாயார் ஸ்வெட்லானா ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.