அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்காக பணியாற்றியவர்களை வேட்டையாடும் நடவடிக்கைகளை தலிபான்கள் ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மேலும் ஐ.நாவிற்கு உளவுத் தகவல்களை வழங்கும் உலகளாவிய பகுப்பாய்வுகளுக்கான நோர்வே மையத்தினால் தயாரிக்கப்பட்ட இரகசிய ஆவணத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தோடு ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதாக அறிவித்திருந்த தலிபான்கள், தற்போது வெளிநாட்டு படையினருடன் இணைந்து செயற்பட்டவர்களை குறிவைத்து அவர்கள் தொடர்பான தகவல்களை பெறும் புதிய வலையமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.