கத்தாரில் சமூக வலைதளங்களைப் பாவிப்போருக்கான முக்கிய அறிவித்தல் ஒன்றை கத்தார் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி அமைதிக்கு தீங்கு விளைவித்தல், இனக்குழுக்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தல், இனங்களுக்கிடையிலான வெறுப்புச் செய்திகைளைப் பரப்புதல் போன்ற செயற்பாடுகளைச் செய்தால் கைது செய்யப்படுவீர்கள் என்பதாக அமைச்சு எச்சரித்துள்ளது..

அண்மையில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி இது போன்ற சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட ஏழு நபர்கள் கைது செய்யப்பட்ட பின்னணியிலேயே இந்த செய்தியை வெளியிட்டப்பட்டுள்ளது கைது செய்யப்பட்டவர்கள் வழக்கு விசாரனைகளுக்கு உட்டுத்தப்பட்டுள்ளார்கள்.

எனவே சமூக வலைதளங்களைப் பாவிப்பவர்கள் சமூகத்தின் எந்தக்கூறுகளையும் பாதிக்காத வண்ணம் நடந்து கொள்ளும் படியும், உரிய முறையில் சமூக வலைதளங்களைப் பாவிக்காவிடில், கைது செய்வதை தவிர்க்க முடியாது என்பதாகவும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.