சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் வகையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்த புகைப்படம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் தெளிவூட்டி, அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

அதன்படி ,அஜித் ரோஹன அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் அவரது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் ,கொரோனா தொற்றுக்குள்ளாகி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அஜித் ரோஹண அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.