164 வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமைச்சரவையில், அனுமதி கோரியுள்ளார்.அத்தியாவசிய சேவைகளுக்காக இவ்வாறு இந்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.நோயாளர் காவு வண்டிகள், நீர் தாங்கி வாகனங்கள், டபள் கெப் வாகனங்கள் உள்ளிட்ட 164 வாகனங்கள் இவ்வாறு கொள்வனவு செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. முன்னதாக ஜீப் வண்டிகள் கொள்வனவு செய்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.