ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ள நிலையில் நாட்டை முடக்கும் தீர்மானம் எதனையும் அறிவிக்க மாட்டார் என கூறப்படுகிறது. 

மாறாக நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் நாட்டை மூடினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து நாட்டு மக்களுக்கு தௌிவுபடுத்த உள்ளதாக தெரியவருகிறது. 

அத்துடன் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றும் ஜனாதிபதி மல்வத்து, அஸ்கிரிய பீட தேரர்களையும் சந்திக்க உள்ளார்.