சிறுநீரக நோய் நிலைமையால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிறுநீரக நோய் விசேட வைத்தியர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் அதிக பாதிப்புகள் ஏற்படும் என அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன், சிறுநீரக மாற்றீடு செய்துக்கொண்டவர்கள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டால் வீடுகளில் இருந்து சிகிச்சை பெறக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.