ஜனாதிபதிக்கும் - ரணிலுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எம்.பியுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், இன்று செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இலங்கையில் தற்போது காணப்படுகின்ற கொரோனா ​நிலைமைகள் தொடர்பில் இருவரும் தொலைபேசியில் உரையாடிக்கொண்டனர்.

அதனடிப்படையிலேயே குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஐ.தே.கட்சியின் உப-தலைவர் அகில விராஜ் காரியவசத்தின் தந்தை மரணமடைந்துள்ளார்.

அதன் காரணமாக, அவரது இறுதி கிரியையில் பங்கேற்பதற்காக, ரணில் விக்கிரமசிங்க கொழும்பிலிருந்து இன்றுக்கா​லை வெளியேறிவிட்டார்.

இதனையடுத்து, கொழும்புக்குத் திரும்பியவுடன் இந்த சந்திப்பு இடம்பெறும் என ஐ.தே.கவின் தலைமையகமான சிறிகொத்தாவின் வட்டாரங்கள் தெரிவித்தன.