சம்பளத்தை வழங்கமாட்டேன்.பொருளாதார நெருக்கடியில் உள்ளதாக அமைச்சர் குமுறல் !

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றை ஒழிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒரு மாத சம்பளத்தை அர்ப்பணிப்பு செய்ய முன்வைத்துள்ளனர்.

எனினும் 225 உறுப்பினர்களில் ஒருவர் தனது சம்பளத்தை அர்ப்பணிக்க முடியாது என இன்று கூறியுள்ளார்.

சிறுவர், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சரான பியல் நிசாந்த கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் இதனை குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்திலுள்ள அரச வங்கியொன்றில் பெற்றுக்கொண்ட கடனுக்காக தனது சம்பளத் தொகை அப்படியே அறவிடப்படுவதாகவும் கொரோனா பணிக்காக தனது சம்பளத்தை அர்ப்பணிக்க முடியாத பொருளாதார இக்கட்டான நிலைக்கு தாம் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.