மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்றுக்கு இலக்காகும் நோயாளர்களும், தொற்றில் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரும் அதிகரித்து வரும் நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகளை வீடு வீடாக சென்று ஏற்றும் நடவடிக்கைகளை இன்று முதல் இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர்.

சுகாதார அமைப்பும், இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து வீடு வீடாக சென்று தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியாத 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இதன்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.இராணுவத்தின் மருத்துவ பிரிவானது பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.