தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு பயணக்கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக அமுல்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அத்தியாவசிய தொழில்களில் ஈடுபடுவோருக்கு மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் பொது இடங்களுக்கு வருகைத்தருபவர்கள் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது அவசியமாகுமெனவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டார்