பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மாத்திரம் அன்றி இந்த நாட்டில் பணம் படைத்தவர்கள் அனைவரும் தங்களுடைய வருமானத்தில் இருந்து ஒரு பகுதியை கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வழங்க வேண்டுமென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய மாதாந்த சம்பளத்தில் 50 வீதத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்க வேண்டும் கேட்டுக் கொண்டுள்ளார். 

அதேபோன்று இந்த நாட்டில் பணம் இல்லாதவர்களின் நன்மை கருதி பணம் உள்ளவர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்களுடைய வருமானத்தில் ஒரு பகுதியை கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வழங்க முன்வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இக்கட்டான நேரத்தில் இது மிகவும் பொருத்தமானதாக அமையும் என அவர் கூறியுள்ளார்.