கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் அனைத்து பாடசாலைகளையும் மீளத் திறப்பது தொடர்பில் கல்வியமைச்சு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.நாட்டில் நிலவும் கொரோனா நிலைமையை கருத்திற் கொண்டு இது குறித்து முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, செப்டெம்பர் இறுதி வாரத்தில் அல்லது ஒக்டோபர் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வியமைச்சர் உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.