பதுளை, பண்டாரவளை நகரங்களிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானம்..!

கொரோனா பரவலுக்கு மத்தியில் பதுளை மற்றும் பண்டாரவளை நகரங்களிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு வர்த்தக சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி, பண்டாரவளை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை இன்று (16) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 23ம் திகதி வரை மூடுவதற்கு பண்டாரவளை ஐக்கிய வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், பதுளை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை எதிர்வரும் 18ம் திகதி முதல் ஒரு வார காலத்திற்கு மூட வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.