கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினப்புரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் தொலுவ, தெல்தொட்ட, உடபலாத்த, உடநுவர உள்ளிட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிலும், இரத்தினப்புரி மாவட்டத்தின் குருவிட்ட மற்றும் இரத்தினப்புரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மண்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.