நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற தகவலின் காரணமாக பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் பதிவாகியுள்ளன. 

‘எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டால் வேறு எவருக்கும் முன்னதாக நான் நாட்டுக்குச் சொல்வேன்.நான் மக்களுக்கு உண்மையாக இருந்தேன் மற்றும் விலை உயர்வு குறித்து முன்கூட்டியே தெரிவித்தேன்’ எனவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.