சென்னையில் உள்ள சில திரையரங்குகளில் இன்று திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதன்படி ,தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று 50 சதவீதப் பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது. ஆனால் கடந்த திங்கட்கிழமை திரையரங்குகள் திறக்கப்படாமல் மூடப்பட்டு இருந்தன. 

மேலும் ,இன்று முதல் தியேட்டர்கள் திறக்கப்படுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 40க்கும் மேற்பட்ட புதிய தமிழ்த்திரைப்படங்களுடன் இந்திய மலையாளம், தெலுங்கு ஆங்கிலப் படங்களும் வரிசையாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.