தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க மற்றும் அவரது குடும்பத்தினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்படடுள்ளது.

மேலும் அவரது பணியாளர்கள் இருவருக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக கடந்த 13ஆம் திகதி முதல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதான அலுவலகம் மூடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

எவ்வாறாயினும், 

தற்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களைக் கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்வதாக அதன் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.