பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் வழக்கு விசாரணையில் நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதுபோன்ற ஒரு வழக்கில் தான் பாபா என அழைக்கப்பட்ட சிவசங்கர் பாபா என்பவர் சில வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

இவர் நடத்தி வரும் ஆசிரமம் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட நிலையில், சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

மேலும், தற்போது அவ்வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், ஜாமீன் வழங்க இயலாது என நீதிபதி தெரிவித்தனர்.

சிபிசிஐடி போலீசார் கைது செய்யப்பட்ட சாமியார் சிவசங்கர் பாபாவை விசாரணை செய்யும் போது தான் ஆண்மையற்றவர் என்றும், என்னால் எப்படி இதுபோன்ற காரியங்களில் ஈடுபட முடியும் என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தக் காரணத்தை கூறி சிவசங்கர் பாபா மீண்டும் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியுள்ளார். அவரின் ஜாமீன் மனு தற்போது விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் சரமாரி கேள்விகளை கேட்டுள்ளனர்.

அதில் குறிப்பிடும் வகையில், சிவசங்கர் பாபாவுக்கு ஏற்கனவே ஒரு மகன், ஒரு மகள் இருப்பதையும், அவர்கள் அமெரிக்காவில் வசிப்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியது.

உங்களுக்கு மகன், மகள் இருக்கையில் ஆண்மையற்றவர் என்று எப்படி கூற முடியும்? எனக் கேள்விகளை கேட்டு நீதிமன்றம், சிவசங்கரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.