கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இதன்படி, நாட்டில் நேற்றைய தினம் (26) 214 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,371 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 416,182ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவிக்கின்றது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 353,191 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதுடன், 54,834 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.