மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பாதாள உலக தலைவர்களில் ஒருவரான மொஹமட் நியாஸ் நவுபர் அலியாஸ் (பொட்ட நவுபர்), சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார்.

இதன்படி ,கொவிட் தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே, அவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் ,கொவிட் தொற்றுக்கு உள்ளானதை அடுத்து, பூஸா சிறைச்சாலையிலிருந்து வெலிகட சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே, அவர் உயிரிழந்துள்ளார்.