கரீபியன் தீவில் ஒன்றான ஹைதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அலாஸ்காவிலும் உணரப்பட்டுள்ளது.

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 7.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஹைதியின் போர்ட்-அயு- பிரின்ஸில் இருந்து 118 கி.மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்காவின் அலாஸ்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாகவும், இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.