கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தங்களது 5 வயது மகளை தனியாக விட்டுவிட்டு தந்தையும் தாயும் பரிதாபமாக பலியான சம்பவமொன்று கிரிபத்கொடை பகுதியில் பதிவாகியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் கிரிபத்கொடை வாசிட் தனியார் கல்வி நிறுவனத்தில் பணியாற்றிவந்த 36 வயதுடைய விரிவுரையாளரான அனுருத்த என்பது தெரியவந்துள்ளது. இவர் கடந்த 22ஆம் திகதி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இவரது மனைவியும் நேற்று (25) காலை கொரோனாவின் பிடிக்குள் சிக்கி உயிரிழந்தார்.

தற்போது இவர்களது 5 வயது மகள் பெற்றோரை இழந்து பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளார்.