ஆப்கானை கைப்பற்றிய தாலிபான் அமெரிக்கப் படைக்கு கெடு விதித்துள்ளது மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த உள்நாட்டு போரில் தாலிபான் ஆப்கானை முழுவதுமாக கைப்பற்றி இருந்தாலும், இன்னும் ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையம் அமெரிக்க படையினரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து, அனைத்து அமெரிக்கா படைகளும் வெளியேறும் என அறிவித்திருந்தார்.

இருப்பினும், இதுவரை முழுவதும் அமெரிக்கப்படைகள் ஆப்கானை விட்டு வெளியேறவில்லை. அதோடு ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையத்தின் ஒருபகுதியை கட்டுப்பாட்டில் வைத்து அங்கிருக்கும் மக்களை வெளியேற்றி வருகின்றனர்.

இதனால் கோபமடையும் தாலிபான்கள் காபூல் விமான நிலையம் மீது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம், தற்கொலைப்படை தாக்குதலை நடத்தலாம் என அமெரிக்கா அச்சம் தெரிவித்திருக்கிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத் தலைவர்கள் ஏற்கனவே அமெரிக்கா படைகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தாலும், இப்போது மீண்டும் உயிர்ப்புடன் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்கொலைப்படை தாக்குதல் நடக்கும் என கூறப்படுகிறது.

மேலும், தாலிபான்களும் 'வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு பின்னரும் அமெரிக்கா படைகள் ஆப்கானில் இருக்கக் கூடாது; அப்படி இருந்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும்' என்று எச்சரித்துள்ளனர்.

ஆப்கானில் இருந்து தப்பித்து வரும் மக்கள் ஆப்கான் நிலை குறித்து கூறும் போது, 'காபூலில் இருக்கும் எங்களின் சகோதர சகோதரர்களின் நிலை மோசமாக உள்ளது. காபூல் விமான நிலையத்தில் ஆப்கான் பாதுகாப்பு படையினருக்கும் அடையாளம் தெரியாத குழுவினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ஆப்கான் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டத்தோடு, பல பேர் படுகாயமடைந்துள்ளனர்' எனக் தெரிவித்துள்ளனர்.