நுவரெலியா பொது மருத்துவமனையின் 3 மருத்துவர்கள் உட்பட 23 மருத்துவப் பணியாளர்கள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொது மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இம்மருத்துவனையின் 3 மருத்துவர்கள், 13 தாதிகள் மற்றும் 7 கனிஷ்ட தர ஊழியர்கள் ஆகியோரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். 

இம்மருத்துவமனையின் கொரோனா வார்டில் மருத்துவர்கள், தாதிகள் மற்றும் கனிஷ்ட தர ஊழியர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் பணிப்பாளர் கூறினார்.