20 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் மாயமாகியுள்ளமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன – என்று அரச உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த தடுப்பூசிகள் தொடர்பில் எவ்வித பதிவும் இடம்பெறவில்லை எனவும், எனவே, அவற்றுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் உறுதியான தகவல் கிட்டவில்லை எனவும் தெரியவருகின்றது.