கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றால் இதுவரை 16 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 

அதேவேளை 160 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொவிட் தொற்றுக்காக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வைத்தியசாலையில் தினமும் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அனுமதிக்கப்படுகையில்  தற்போது நான்கு சிறுவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுகின்றனர் என மேற்படி வைத்தியசாலையின் மருத்துவர் ஜீ. விஜேசூரிய தெரிவித்தார். 

மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இல்லை என்று குறிப்பிட்ட அவர், அனுமதிக்கப்படும் சிறுவர்களுக்கு படுக்கைகள் வழங்கப்படுவதையும் சிறுவர்கள் தரையில் விடப்படாதிருப்பதையும் உறுதிசெய்ய வைத்தியசாலை ஊழியர்களுக்கு விஷேட அறிவுறுத் தல்கள் வழங்கப்பட்டுள்ளன என  மேலும் தெரிவித்தார்.