கொரோனா வைரஸ் பரவலால் 10 நாட்களுக்கு நாட்டை முடக்குவதன் மூலம் புகையிரதத் திணைக்களத்துக்கு 13 கோடியே 33 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்படும் என்று, புகையிரதத் திணைக்கள அதிகாரி தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

நாட்டை முடக்குவதால் புகையிரதத் திணைக்களத்துக்கு நாளொன்றுக்கு ஒரு கோடியே 30 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்படுகிறது. மாதமொன்றுக்கு 40 கோடி ரூபாய் நட்டம் ஏற்படுகிறது.

புகையிரதத் திணைக்களத்தக்கு மாதமொன்றுக்கு 50 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கின்றது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்தனர் பின்னர் அந்த வருமானம் 10 கோடியாகக் குறைவடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.