பருவநிலை மாற்றம் காரணமாக, 2,100 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவின் கடலோரப் பகுதியில் உள்ள 12 நகரங்கள், சராசரியாக 3 மீற்றர் அளவு நீருக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ,பருவநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவின் அறிக்கையின் அடிப்படையில், கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த தரவுகளை, நாசா வெளியிட்டுள்ளது.

அதில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

மேலும் ,தமிழகத்தின் சென்னை மற்றும் தூத்துக்குடி நகரங்கள் இவ்வாறு கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.