தொற்றுநோயியல் பிரிவு, இலங்கை செவிலியர் சங்கம், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் அகில இலங்கை மருத்துவ மற்றும் மருத்துவமனை ஊழியர் சங்கங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஊரடங்கு உத்தரவை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன.

தற்போதைய ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர் . 

எவ்வாறாயினும், இந்த கோரிக்கை கோவிட் கட்டுப்பாடு பணிக்குழுவின் சிறப்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உத்தியோகபூர்வ முடிவு வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் குறித்த  சங்கங்களுக்கு அறிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது