யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த கடற்படைச் சிப்பாய் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று காலை கண்டறியப்பட்டுள்ளது. அவர் தற்போது விடத்தற்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
கடமைக்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த கற்படைச் சிப்பாய் ஒருவர், கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சேர்க்கப்பட்டு இருதய துடிப்பு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டிருந்தார். அவருடன் தொடர்புடைய சிலருக்கு கோரோனா இருந்தமை தொடர்பில் விசாரணையில் தெரியவந்தது. 
இந்த நிலையில்  அவருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
முதல் இரண்டு தடவைகள் அவருக்கு கோரோனா தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்தது. அவர் விடத்தற்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்குள்படுத்தப்பட்டார்.
எனினும் மூன்றாவது பரிசோதனையில் அவருக்கு கோரோனா வைரஸ் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் தொடர்புகொண்ட போதும் பதில் கிடைக்கவில்லை.