16 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஐவருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் 30 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குறித்த 5 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுர மேல் நீதிமன்ற நீதிபதியும், வட மத்திய மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியுமான கலாநிதி சுமுது பிரேமச்சந்திர நேற்று (2) இந்த தீர்ப்பை வழங்கினார்.


குற்றவாளிகளுக்கு எதிராக அதிகுற்றபத்திரிகை 5 இல் மூன்று தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டதுடன், அதில் மூவருக்கு ஏழு வருடங்களும் மற்றும் 2 வருடங்கள் முறையே 30 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தலா ஒரு இலட்சம் படி நட்டஈடு வழங்குமாறு உத்தரவிட்ட நீதிபதி பிரதிவாதிகள் அதை செலுத்த தவறினால் மேலும் இரண்டு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டணையை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
நொச்சியாகமயை சேர்ந்த 48 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் அடங்கியவர்களுக்கே இவ்வாறு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.