பொலிஸ் அதிகாரியாக நடித்து பம்பலப்பிட்டி பொலிஸ் களப்படை தலைமையகத்துக்குள் நுழைய முயன்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 12 ஐச் சேர்ந்த 23 வயதான இளைஞரே இவ்வாரு நாராஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தான் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமை புரிவதாகவும் சர்வதேச பொலிஸ் அடையாள அட்டை ஒன்றை தான் பெற வேண்டியுள்ளதாகவும் சந்தேக நபரான இளைஞர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சந்தேகம் கொண்ட பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையக அதிகாரிகள், நாராஹேன்பிட்டி பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே குறித்த சந்தேக நபர் கைது செய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.