பாடசாலை ஆரம்பமாகவுள்ள நிலையில் சுகாதாரத்துறை உத்தியோகஸ்தர் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து முழுமையான சுத்திகரிப்பு மற்றும் தொற்றுநீக்கல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர் 


அன்னை கலா மன்றமும் பெற்றோர்களும் இணைந்து இன்று காரைநகர் யாழ்ரன் கல்லூரியினை அதிபர் இன் வழிகாட்டலில் சுகாதாரத்துறை உத்தியோகத்தர் ஜெயபிரதீப் அவர்களின் நெறியாள்கையில் அன்னை கலாமன்ற இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் அத்துடன் பாடசாலை ஊழியர்கள் அனைவரும் ஒத்துழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் சுத்திகரிப்பு பணியை நிறைவேற்றி பிற சமூகத்திற்கும் ஓர் எடுத்துக்காடாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது 

பாடசாலை மாணவ சமூகத்தின் மீது மிகுந்த அக்கறைகொண்டு பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம் 
இவர்களைப்போலவே அனைத்து கிராமங்களிலும் இவ்வாறான பணி இடம்பெற வேண்டும் என்பதுடன் மாணவ சமூகத்தின் நலனில் அனைவரும் அக்கறைகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்