கடும் வேகத்தில்  சென்ற யாழ். மாநகர சபையின் தீ அணைப்பு வாகனத்தின்  முன் ரயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து  மூன்றுமுறை குத்துக்கரணம் அடித்து  அருகில் உள்ள காணிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இச்சம்பவலம் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் சற்று முன்னர் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 
தீ அணைப்பு வாகனத்தில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 


வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில்  இருந்து வாகனம் கடும் வேகமாக பருத்தித்துறைபக்கமாக சென்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.