ஈரோடு அருகே கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி அருகே பேய் இருப்பதாக சமீபத்தில் வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.


ஈரோடு அருகே கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி அருகே இருந்த ஒரு சிமெண்ட் சாக்குப்பையில் இருந்து வெள்ளையாக சிறிய அளவில் தோன்றிய உருவம் ஒன்று, கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக மாறிய பின்னர் மறைந்ததாக கூறப்பட்டது.

இந்த வீடியோவில் தோன்றிய அந்த உருவம் பேயின் உருவம் என்று வீடியோவைப் பார்த்தவர்களால் கூறப்பட்ட நிலையில், அந்த இடத்தில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெண் காவலர் அவ்விடத்தில் ரத்த வாந்தி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பேய் நடமாடியதாகக் கூறப்பட்ட இடத்தில் பணியில் இருந்த பெண் காவலர், ரத்த வாந்தி எடுத்துள்ளதோடு, அவருக்கு காது வழியாக ரத்தம் வந்ததாகவும் கூறப்படுகிறது.  அதுமட்டுமில்லாமல், இருசக்கர வாகனத்தில் அவ்வழியே சென்ற ஒருவருக்கு அதே இடத்தில் வலிப்பு ஏற்பட்டதாக, ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.