இணுவிலில் இருந்து இந்தியா சென்ற வியாபாரிக்கு கொரோனோ என 8 ஆம் திகதி மாலை காலைக்கதிரிலும் , 09ஆம் திகதி ஏனைய ஊடகங்களிலும் செய்திகள் வந்தன.


செய்தி வெளியான 08ஆம் திகதி இந்திய துணைத்தூரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது தமக்கு உத்தியோக பூர்வமாக தெரியாது என அவர்கள் தெரிவித்தார்கள் எனவும் , தமக்கு உத்தியோக பூர்வமாக தகவல்கள் கிடைக்காத போதிலும் கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய வியாபாரியுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 13 பேரை தனிமைப்படுத்தி அவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்களுக்கு கொரோனோ தொற்று இல்லை என வடமாகாண சுகாதார பணிமையினர் அறிவித்தனர். எனவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் 13 ஆம் திகதி தினக்குரல் பத்திரிகையில் வியாபரிக்கு கொரோனோ தொற்று இல்லை எனவும் 09ஆம் திகதியே அவர் திண்டுக்கலில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டார் எனவும் செய்தி வெளியாகி உள்ளது.

அது தொடர்பில் வடமாகாண சுகாதார பணிமனையினர் தமக்கு உத்தியோக பூர்வமாக இந்தியாவில் இருந்து தகவல் வரவில்லை எனவும் அதனால் யாழில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பர்கள் என தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்றைய 14ஆம் திகதி உதயன் பத்திரிகையில் இந்திய வியாபாரிக்கு கொரோனோ வந்தே மீண்டார் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார் என செய்தி வெளியாகியுள்ளது.