களுத்துறை கட்டுகுருந்த கடலில் குளிக்க சென்ற இளைஞர்கள் 6 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


களுத்துறை ரஜவத்தை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய லஹிர கசுன் இன்றைய தினம் திருமணம் செய்வதற்கு ஆயத்தமாக நிலையில் நேற்று கட்டுகுருந்த கடலுக்கு 5 நண்பர்களுடன் சென்றுள்ளார்.

அங்கு குளித்துக் கொண்டிருந்த லஹிரு திடீரென கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். தங்கள் நண்பர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதாக லஹிருவின் நண்பர் 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்து தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய களுத்துறை பொலிஸார் இலங்கை கடற்படைக்கு இது தொடர்பில் அறிவித்த பின்னர் லஹிருவை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.