சுதேச மக்களின் கலாச்சார மற்றும் பண்பாட்டு விழுமியங்களையே ஊடகங்கள் பாதுகாத்துப் பிரதிபலிக்க வேண்டும்:


இன்று (23) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடலின்போதே நான் மேற்கண்டவாறு தெரிவித்தேன்.
புதிய தொழிநுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒன்றுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய மாற்றங்கள் மற்றும் அறிவை வளர்க்கக்கூடிய நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதன் அவசியத்தை பற்றியும் இன்று நாம் கலந்துரையாடினோம்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு நான் முன்வைத்த “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்தை மக்களில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
அதனால் எனது கொள்கையை எடுத்துக்காட்டுவதற்கு அப்பால் எமது அரசாங்கம் செயற்படுத்தி வருகின்ற -  கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த - அடிப்படைத் தத்துவத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்வதன் முக்கியத்துவத்தையும் தேவையையும் நான் சுட்டிக்காட்டினேன்.
வெளிநாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்குத் தெரிவு செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய முறையான வேலைத்திட்டம் ஒன்றின் அவசியத்தையும் நான் இதன்போது வலியுறுத்தினேன்.
சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது நாம் கலந்துரையாடினோம். 
சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் சுதத் ரோஹன, நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹசந்த ஹெட்டியாரச்சி, பிரதான நிறைவேற்று அதிகாரி நளின் குமார நிஷங்க ஆகியோருடன் பணிப்பாளர் வாரீய உறுப்பினர்களும்நிறுவனத்தின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளும் இன்றைய கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
கோட்டாபய